காவிரி விவகாரம்: போராட்டக் களமாக மாறிய தமிழ்நாடு!

 

காவிரி நதிநீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின்  உத்தரவை மதிக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனே  காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராக, தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் ஆதரவு கட்சிகளின் சார்பாக, இன்று தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் பல இடங்களில் வங்கி, அஞ்சல் நிலையம், இரயில் நியைங்கள்  உள்பட மத்திய அரசின் நிறுவனங்கள் முற்றுகையிடப்பட்டன.

அதுபோல, “நாம் தமிழர்” கட்சியை சேர்ந்த தங்கத்துரை என்பவர் “காவிரி தண்ணீர் வராதா? தமிழர்களின் தாகம் தீராதா ” என்று எழுதப்பட்ட பதாகையை தனது கழுத்தில மாட்டியும், “கோடி தமிழர்கள் கூடிடுவோம், மேலாண்மை வாரியம் அமைத்திடுவோம்” என்று எழுதப்பட்ட பதாகையை தனது இருசக்கர வாகணத்தில் கட்டியடி சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு இன்று காலை பயணம் செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் ஒரு சில இடங்களில் இன்று காலை முதலே அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஸ்டேட் பேங்கை முற்றுகையிட்டு வங்கியின் கதவை இழுத்து சாத்தினர். இதனால் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது. 

திருவாருரில் ரயில் மறியலும் மற்றும் குடவாசல் பகுதியில் பஸ் மறியலும் நடைபெற்றது.

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பொ.மகேஷ் தலைமையில், திருவெறும்பூரில் ரயில் மறியலும் மற்றும் பஸ் மறியலும் நடைபெற்றது.

இப்போராட்டத்தினால் தமிழகத்தில் பல இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை, காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

-வீ.குணசேகரன், பெ.புனித வேல்ராஜ், மு.ராமராஜ், ச.ரஜினிகாந்த், கி.தாமோதரன், நவீன்குமார், எஸ்.திவ்யாஆர்.மார்ஷல், க.மகேஷ்வரன்,   ஆர்.சிராசுதீன்.

Leave a Reply