திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் மிக நீளமான கனரக வாகனங்கள்…!

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை ரவுண்டாணா முதல் துவாக்குடி வரை  சர்வீஸ் சாலை அமைக்காதக் காரணத்தால், அந்த வழியில் பயணம் செய்யும் பயணிகளும், அப்பகுதி பொதுமக்களும் தினந்தோறும் உயிரை பணயம் வைத்துதான் பயணம் செய்ய வேண்டியுள்ளது.

அந்த வழித் தடத்தில் பாரத மிகுமின் நிறுவனம் (BHEL) உள்பட, அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் இருப்பதால், அங்கு தயாரிக்கப்படும் மற்றும் உற்பத்தி செய்யப்படும் இயந்திரங்களையும், இரும்பு பொருட்களையும் தரைவழி மார்க்கமாக மிக நீளமான கனரக வாகனங்கள் (கண்டெய்னர்) மூலம், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இரவு நேரங்களில் கொண்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில், இன்று மாலை 5.30 மணியளவில் பாரத மிகுமின் நிறுவனத்திலிருந்து லோடு ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி ஒன்று, அரியமங்கலம் எஸ்.ஐ.டி-க்கும் மேற்கே – மேம்பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் வேகமாக சென்றபோது விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர், கிளினர் உள்பட மொத்தம் 3 பேர் படுகாயமடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையானப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதுக்குறித்து அரிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

-ஆர்.சிராசுதீன்.

 

 

Leave a Reply