காவிரி நதிநீர் விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல்!

Hon’ble Mr. Justice Dipak Misra The Chief Justice Of India.

Hon’ble Mr. Justice Amitava Roy.

Hon’ble Mr. Justice A.M. Khanwilkar.

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

 

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள் அமிதவ் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. நிலத்தடி நீரை அளவுகோலாகக் கொண்டு இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பு கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் வகையில் அமைந்துள்ளது.

மேலும், காவிரி நதி நீரில் உரிமை கொண்டாட எந்த ஒரு தனிப்பட்ட மாநிலத்துக்கும் உரிமை இல்லை எனவும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், காவிரி வழக்கில் மேல்முறையீடு செய்யமுடியாது எனவும், உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2007-ல் காவிரி நடுவர் மன்றம், தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டிருந்த நிலையில்,  தற்போது 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேவேளையில், கேரளாவுக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீர் என்ற நடுவர் மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை எனவும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், தமிழகத்திற்கு மட்டும் 14.75 டிஎம்சி தண்ணீர் குறைக்கப்பட்டிருப்பது, தமிழக அரசியலிலும் மற்றும் தமிழக விவசாயிகள் மத்தியிலும் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டும், கர்நாடகாவில் உள்ள தொழிற்சாலைகளின் தேவைக்கு கூடுதல் நீர் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டும், கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என, உச்ச நீதிமன்றம் காரணம் தெரிவித்து இருந்தாலும், கர்நாடகா மக்களை திருப்திப்படுத்துவதற்காகவே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

 

 

 

One Response

  1. G Ramachandram February 16, 2018 4:45 pm

Leave a Reply