தனியார் பள்ளி கழிவு நீர் அனைத்தும் ஏரியில் கலக்கும் கொடுமை!- சுற்றுச் சூழக்கு தீங்கு விளைவிக்கும் எய்ம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம்!


திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், ஆகாரம் கிராமத்தில் “எய்ம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி (AIM MATRIC HIGHER SECONDARY SCHOOL)” உள்ளது. இந்தப்பள்ளியானது ஏரி அருகில் அமைந்துள்ளது. பள்ளிக்கென்று தனியாக கழிவு நீர் தொட்டி அமைக்காமல் செப்டிக் டேங்க் நீர் உள்பட அனைத்து கழிவுகளையும் நேரடியாக ஏரியில் கலக்கும் படி செய்துள்ளனர். இவ்வாறு செல்லும் கழிவு நீர் 5 அங்குல குழாயின் மூலம் சுமார் 200 அடி தூரத்தில் ஏரியில் நேரடியாக ஊற்றப்படுகிறது. 

மழைக்காலங்களில் ஏரியில் நீர்வரத்து உள்ள நேரங்களில், இந்த கழிவுகளானது ஒன்றோடு ஒன்று கலந்து குடிநீரை மாசுபடுத்துகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரும் மாசுடைகிறது.

வருங்கால தலைமுறையினருக்கு ஆணிவேராக இருந்து கல்வி கற்றுக்கொடுக்கும் கல்வி நிறுவனமே, இதுப்போன்று பொறுப்பில்லாமல் சுற்றுச் சூழக்கு தீங்கு விளைவிப்பது எந்த வகையில் நியாயம்?

இதையெல்லாம் நேரில் ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள், தனிப்பட்ட ஆதாயத்திற்காக பள்ளி நிர்வாகத்திடம் மாமுல் வாங்கிக்கொண்டு மவுனமாக இருந்து வருகிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும் போது “அழுக்கை போக்க சோப்பு; ஆனால், அந்த சோப்பு டப்பா அழுக்கு” என்ற பழமொழிதான் எங்கள் நினைவுக்கு வருகிறது.

எனவே, மாவட்ட ஆட்சித்தலைவர் இந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, ஏரியில் கழிவு நீர் கலப்பதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

-மு.ராமராஜ்.
-ச.ரஜினிகாந்த்.

Leave a Reply