பணம் மற்றும் அதிகாரப் போதையால் படித்த கிரிமினலாக மாறிய பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் கணபதி!

பாரதியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் A.கணபதி

பேராசிரியர் பணி நியமனத்திற்கு சுரேஷ் என்பவரிடம் ரூ.1 லட்சத்தை ரொக்கமாகவும், ரூ.29 லட்சத்தை காசோலையாகவும் வாங்கிய போது, கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் A.கணபதி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பாரதியார் பல்கலைக் கழகத்திலும், துணைவேந்தர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதுக்குறித்து விரிவான விசாரணை நடைப்பெற்று வருகிறது.

லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் A.கணபதி, ஏற்கனவே திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பயோடெக்னாலஜி துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

இவருக்கு திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள அண்ணாநகர், போலிஸ் காலனியில் பேஸ் -2-வில் இவருக்கு சொந்தமான வீடு இன்று (03.02.2018) வரை இருந்து வருகிறது.

கல்வியாளர்களை மக்கள் கடவுளுக்கு நிகராக மதித்து வருகிறார்கள். ஆனால், சமீபக்காலமாக இவரை போன்ற ஒரு சிலர், பணம் மற்றும் அதிகாரப் போதையால் படித்த கிரிமினல்களாகவே மாறிவருகின்றனர்.

ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரே இந்த லட்சணத்தில் இருந்தால், ஒட்டுமொத்த பல்கலைக் கழகத்தின் நிர்வாகமும் எப்படி இருக்கும்?

 இதையெல்லாம் பார்க்கும்போது,

பாதகஞ் செய்பவரைக் கண்டால்நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பாஅவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

-என்ற மகாகவி பாரதியாரின் கவிதை வரிகள்தான் நம் நினைவுக்கு வருகிறது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

படங்கள் : ஆர்.சிராசுதீன்.

 

 

 

 

 

 

Leave a Reply