ஆதிதிராவிடர் நலத்துறை அரசாணை 51 மற்றும் 52- ஆகியவற்றை ரத்து செய்ய வலியுறுத்தி பொறியியல் பயிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் உண்ணா நிலை அறப்போராட்டம்!

பொறியியல் பயிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு எதிராக உள்ள அரசாணை 51 மற்றும் 52 ஆகியவற்றை நீக்க வலியுறுத்தி, அம்பேத்கார் கல்வி நூற்றாண்டு இயக்கத்தினர் மற்றும் அம்பேத்கார் மாணவர் கல்வி இயக்கம் சார்பில், கீழ்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி ,உண்ணா நிலை அறப்போராட்டம் இன்று (03.02.2018) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திருச்சியில் நடைபெற்றது.

  1. ஆதிதிராவிடர் நலத்துறை அரசாணை எண் 51, 52, நாள் 11.08.2017 -ஐ ரத்து செய்ய வேண்டும்.
  2. கட்டணக்குழு நிர்ணயித்த நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கல்வி கட்டணத்தை கல்வி உதவித்தொகையாக வழங்கிடவேண்டும்.
  3. கடந்த பத்து ஆண்டுகளாக மறு நிர்ணயம் செய்யப்படாமல் உள்ள பேணல் படியினை (Maintenance Allowance) உயர்த்திடவேண்டும்.
  4. 4. கலை மற்றும் அறிவியல் பாடபிரிவுகளில் பயிலும் பட்டியலின மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும்.
  5. 5. கல்வி உதவி தொகையை அந்தந்த நிதியாண்டிலே ஒதுக்கீடு செய்து கல்வி ஆண்டு முடிவதற்குள் வழங்கிடவேண்டும்.

மேற்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைப்பெற்ற உண்ணாவிரத அறபோராட்டத்தில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்துக்கொண்டனர்.

-ச.ராஜா.

படங்கள்: எஸ்.திவ்யா.

Leave a Reply