திருச்சி, பிச்சாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 69 –ம் ஆண்டு குடியரசு தின விழா :

69th Republic Day Celebration in School

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், பிச்சாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 69-ஆம் ஆண்டு குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்  E . கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின விழாவை துவக்கி வைத்தார்.

பள்ளி தலைமை ஆசிரியை R.கோதை, உதவி ஆசிரியர்  R.தனலெக்ஷ்மி, சத்துணவு அமைப்பாளர் P.தனக்கொடி, அங்கன்வாடி பணியாளர் A.புனிதமலர், தன்னார்வ தொண்டர் R.கவிதா மற்றும் ரெட் ரோஸ் இளைஞர் குழு ஆகியோர் ஒன்றிணைந்து 69-ம் ஆண்டு குடியரசுதின விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

குழந்தைகளின் மாறுவேட கலை நிகழ்ச்சியில்  மகாத்மா காந்தியாக இரண்டாம் வகுப்பு மாணவன் K. தமிழ்செல்வன். கர்ம வீரர் காமராசராக அங்கன்வாடி சிறுமி N. இனியா, ஆசிய ஜோதி ஜவஹர்லால் நேருவாக முதலாம் வகுப்பு மாணவன் V. மிதுன், முண்டாசு கவி பாரதியாக இரண்டாம் வகுப்பு மாணவி R. கவிதர்சினி, டாக்டர் முத்துலட்சுமியாக மூன்றாம் வகுப்பு மாணவி K. கிருத்திகா ஆகியோர் தோன்றி  தங்களின்  நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர்.

கிராம நிர்வாக அதிகாரி வெங்கடேஷ் முன்னிலை வகித்தார் மற்றும் பிச்சாண்டார்கோவில் கிராம முக்கியஸ்தர்கள்  T.பாலசுப்ரமணியன், மனோகர், பெரியண்ணன், V.ராஜகோபால், G.மணி மற்றும் ரெட் ரோஸ் இளைஞர் குழுவினர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்கள் பள்ளி குழந்தைகளுக்கு பரிசு பொருட்களை வழங்கினர். தலைமை ஆசிரியை  R. கோதை நன்றியுரையாற்றி விழாவை நிறைவு செய்தார்.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply