தமிழகத்தில் பாதுகாப்பு துறை சார்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டும்: பாதுகாப்புத்துறை கண்காட்சியில் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி பேச்சு!

சென்னை கலைவாணர் அரங்கில் இந்திய பாதுகாப்புத்துறை சார்ந்த நிறுவனங்களின் 2 நாள் கண்காட்சி இன்று துவங்கியதுஇந்த கண்காட்சியில் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி, இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், முப்படையின் துணை தளபதிகள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

உள்நாட்டு நிறுவனங்களுக்கு பாதுகாப்பு துறை முக்கியத்துவம் கொடுப்பது வரவேற்கத்தக்கது. பாதுகாப்பு துறை வாகனங்கள் தயாரிக்கும் அளவுக்கு ஆட்டொமொபைல் நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன. எச்ஏஎல் மூலம் தமிழகத்தில் பாதுகாப்பு துறை சார்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி பேசினார்.

இந்த கண்காட்சிக்கு முப்படையின் துணை தளபதிகள் வந்துள்ளனர். அவர்கள் தான் கொள்முதல் குறித்து முடிவு செய்வார்கள். பாதுகாப்பு துறை செயலர், டிஆர்டிஓ இயக்குனரும் இங்கு வந்துள்ளனர்

இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு மூலம் பாதுகாப்பு துறை சார்ந்த உள்நாட்டு உற்பத்தி மேம்பட வேண்டும். உள்நாட்டு உற்பத்தி மூலம் கடந்த 3 வருடத்தில் பாதுகாப்பு துறையில் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மிச்சப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு துறைக்கு தேவையானதை உள்நாட்டில் உற்பத்தி செய்ய வேண்டும். ஏற்றுமதி செய்யுமளவிற்கு உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே பிரதமரின் விருப்பம். இவ்வாறு இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசினார்.

-ஆர்.மார்ஷல்.

Leave a Reply