திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (NIT) மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கு இன்று தொடங்கியது!


திருச்சி, துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில்(NIT) “தற்காலத்திய வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பமுறை அமைப்பின் பகுப்பாய்வு– 2018” என்னும் தலைப்பில், மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கு இன்று தொடங்கியது.

இந்த சர்வதேச கருத்தரங்கில் உற்பத்தி மற்றும் தொழிற்துறை பொறியியல் குறிப்பாக ஆராய்ச்சி கருத்துக்களை பரிமாறிக்கொள்ள ஒரு தளமாகும். மேலும், கல்வி மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஊக்குவிப்பதற்காக தேசிய தொழில்நுட்ப கழகத்தின் (NIT) முன்னாள் மாணவர்கள், கல்வி மற்றும் தொழிற்துறை நிறுவனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு பங்குதாரர்களை இந்த நிகழ்ச்சி மூலம் ஒருங்கிணைப்பதற்கு திட்டமிட்டு உள்ளனர். அதனால் இந்த கருத்தரங்கு சர்வதேச அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை என்.ஐ.டி.யில் உள்ள 17 துறையும், என்.ஐ.டி.யின் முன்னாள் மாணவரும், அமெரிக்கா மெக்கிச்கன் வெய்ன் மாநில பல்கலைகழகத்தை சேர்ந்தவருமான ஜெயந்டிரவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்த கல்லூரியில் கல்வியை கற்ற நான் தொழிற்கல்வி பற்றி தற்பொது பேச வந்துள்ளேன். வாழ்க்கை ஒரு வட்டம் அந்த வட்டத்தில் பல போராட்டங்களை சந்தித்துள்ளேன் என்றார்.

இந்த 3 நாள் கருத்தரங்கில் இந்தியாவில் 13 மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும்  வங்காளம், எத்தியோப்பியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்தும் வருகிறார்கள்.

மேலும், மூன்று நாட்களில் 45 தொழில்நுட்ப அமர்வுகள், பல் வகைப்பட்ட கருப்பொருள்கள் மூலம் திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றில் சேர்க்கல் உற்பத்தி, நிலையான உற்பத்தி, லீன் உற்பத்தி, வடிவமைப்பு, விநியோக சங்கிலி மேலாண்மை, தேர்வுமுறை, கலப்பு பொருட்கள், வார்ப்பு, வெல்டிங், லேசர்கள், மேற்பரப்பு பொறியியல் மற்றும் ரோபாட்டிக்ஸ்… போன்ற சில தலைப்புகள் அடங்கும்.

இந்த 3 நாள் கருத்தரங்கில் 300 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளனர். மேலும், அமெரிக்கா பல்கலைகழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. அதில் என்.ஐ.டி. கல்லூரி மாணவர்கள்,  ஒரு பருவத்தேர்வு அமெரிக்காவில் போய் எழுதலாம் மற்றும் ஓர் ஆண்டு செயல்திறன் (பிராஜக்ட்) வகுப்பில் ஈடுப்படலாம்

அதேப்போல் ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்லேண்ட் பல்கலைகழகம் மற்றும் டெக்னாலஜியோடு பிரசாத்யார்லகண்டாவோடு ஆஸ்திரேலியா   பல்கலைகழகத்தில்  மாணவர்கள் பயில்வதற்கு ஒப்பந்தம் ஆவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக இந்த கருத்தரங்கின் தலைவர் துரைசெல்வம் தெரிவித்தார்.

இந்த கருத்தரங்கின் செயலர் பார்தீபன், பொருளாளர் வினோத் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ஆர்.சிராசுதீன்.

Leave a Reply