மூடி கிடக்கும் நெல் கொள்முதல் நிலையங்கள்!- மாவட்ட நிர்வாக  உத்தரவை மதிக்காத நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகள்!

திருவாரூர்   மாவட்டத்தில் முதற்கட்டமாக  விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய   20 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க  மாவட்ட நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் 2-ம் கட்டமாக மன்னார்குடியில் 50 நெல் கொள்முதல் நிலையமும், திருவாரூரில் 50 நெல் கொள்முதல் நிலையமும் இன்று திறக்க உத்தரவிடப்பட்டது.

திருவாரூர், குடவாசல், நன்னிலம், வலங்கைமான் பகுதிகளில்  விவசாயிகளால் விளைவிக்கப்பட்ட நெற்பயிர்களை வாங்க ஆங்காங்கே   இன்று நெல் கொள்முதல் நிலையங்கள் ஒரு சில திறக்கப்பட்டன. நெல் கொள்முதல் நிலையத்தில் அலுவலர், உதவியாளர்காவலர்  மற்றும் லோடு மேன்கள் இருப்பது வழக்கம்.

நிலத்தின் சிட்டா, அடங்கல், கிராம நிர்வாக அலுவலர் சான்று, வங்கி  புத்தகம், செல்போன்  எண் ஆகியவை  நுகர் பொருள் வாணிப கழகத்தால் நெல் கொள்முதல் செய்ய வரும் விவசாயிகள் கொண்டு  வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கிரேடு ரக நெல் ஊக்க தொகையுடன் குவிண்டால் 1-க்கு ரூ.1660(1590+70=1660)

பொது ரக நெல் ஊக்க தொகையுடன் குவிண்டால் 1-க்கு ரூ.1600(1550+50=1600)

ஈரப்பதம்17 சதவீகிதம் வரை  உள்ள தரமான நெல் கொள்முதல் செய்யப்படும். நெல் கொள்முதல் பணியாளர்கள் பணமாகவோ, கூடுதலாக நெல்லாகவோ பெறுவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்தும், பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல்  இருப்பதால், விவசாயிகள்  தற்போது அறுவடை செய்துள்ள நெற்களை  விற்க முடியாத அவல நிலையில் உள்ளனர்.

இதற்கு உடனடியாக நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து  நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-க.குமரன்.

 

Leave a Reply