நன்னிலம் பாரதிதாசன் உறுப்பு கல்லூரியில் சமத்துவ பொங்கல்!

pongal pongal-1 pongal-2 PONGAL-3

 

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்கா, நன்னிலம் பாரதிதாசன் உறுப்பு கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பொங்கல் திருநாளை முன்னிட்டு கோலாகலமாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார்கள்.

தை திங்கள் முதல் நாள் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை தமிழர்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த வருடம் பொங்கல் திருநாளுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில், நன்னிலம் பாரதிதாசன் கல்லூரியில் இன்று கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கல்லூரி வளாகத்தில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்.

புதிய இரண்டு மண்பானைகள் வைத்து கரும்புகள் கட்டி பச்சரிசி பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என்று மாணவ மாணவிகள் கூடி கோலாகலமாக கொண்டாடினார்கள்.

இந்த சமத்துவ பொங்கலின் நோக்கம் சாதி, மதம், இனம் இவைகளை களைந்து எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் சுமார் 600 மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

-ஜி.ரவிச்சந்திரன்.

மாலத்தீவு ஜனாதிபதியின் சிறப்பு தூதர் டாக்டர் மொஹமட் ஆசிம், இந்திய பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து பேசினார்.
சிலிண்டர் ஏற்றி வந்த லாரி தலைகீழாக கவிழ்ந்தது!

Leave a Reply