விவசாய தொழிலாளர்கள் விடுதலை இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஏற்காட்டில் நடைப்பெற்றது.

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில், விடுதலை சிறுத்தை கட்சியின் விவசாய பிரிவான விவசாய தொழிலாளர்கள் விடுதலை முன்னனியின் மாநில செயற்குழு கூட்டம், மாநில தலைவர் செங்கோலன் தலைமையில் நடைப்பெற்றது. மாநில துணைத் தலைவர் கந்தசாமி அனைவரையும் வரவேற்றார்.

இக்கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல்வேறு போராட்டங்கள் நடைப்பெற்ற போதிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டிப்பதாகவும், உடனடடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.

விவசாய பயிர்கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும், டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை கண்டுக்கொள்ளாத மத்திய அரசை கண்டிப்பதாகவும், தற்போது பெய்து வரும் மழையால் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளதால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25000/-– இழப்பீடு அரசு வழங்க வேண்டும்.

ஏற்காடு ஒன்றியத்திற்கு சொந்தமாக உள்ள அரசு நிலத்தை பணக்காரர்களுக்கு சதுர அடி கணக்கில் குத்தகைக்கு விடுவதை நிறுத்த வேண்டும், பஞ்சமி நிலங்களை மீட்டு மழைவாழ் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் விவசாய தொழிலாளர் விடுதலை இயக்கத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

-நவீன் குமார்.