ஆதார் மூலம் சமூகநலத் திட்டங்களில் 70 கோடி இந்தியர்கள் இணைக்கப்பட்டு உள்ளனர்: தேசிய கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி ஆற்றிய உரை!- வீடியோ.

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

அரசின் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் கிடையாது. இதுபற்றி மின்னணு ஊடகங்கள் வாயிலாகவும், பத்திரிகைகள் வழியாகவும் விளம்பரப்படுத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றம் தெளிவாக உத்தரவுகள் பிறப்பித்தும் கூட,  மத்திய ஆட்சியாளர்கள் ஆதார் அட்டைக்கு சட்ட அந்தஸ்து வழங்கி, அரசு திட்டங்கள் அனைத்திற்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கியுள்ளனர். ஆலயங்களில் ஆண்டவனை வழிப்படுவதற்கும் ஆதார் அட்டையை காண்பித்தால்தான் அனுமதி கிடைக்கிறது.

இதை உறுதிப்படுத்தும் விதமாகதான் பிரதமர் நரேந்திரமோதியின் இன்றைய சுதந்திரத் தின உரை அமைந்துள்ளது. உச்சநீதி மன்ற உத்தரவை உதாசீனப்படுத்தி ஆதார் மூலம் 70 கோடி இந்தியர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திரமோதி பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.

ஆதார் அட்டை கட்டாயம் கிடையாது என்று உச்சநீதி மன்றம் தெளிவாக உத்தரவுகள் பிறப்பித்தும் கூட, அதை மத்திய ஆட்சியாளர்கள் மதிக்காத போது, சாமானிய மக்கள் மட்டும் எப்படி சட்டத்தை மதிப்பார்கள்? இதை எப்படி சாதனையாகக் கருத முடியும்?

-எஸ்.சதிஸ்சர்மா.