சுதந்திர இந்தியாவின் முதலாவது சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் பாபா சாகேப் அம்பேத்கர்  சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை!

??????????????????????????????????????? ????????????? ????????????? ????????????? ?????????????

பாபா சாகேப் அம்பேத்கர், இந்திய விடுதலைக்குப் பின்னர் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி முதல் 1951 செப்டம்பர் மாதம் வரை நாட்டின் முதலாவது சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியராகவும், பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர், ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். யாவற்றுக்கும் மேலாக, இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது இவரது இறப்புக்குப் பின் 1990-இல் இவருக்கு வழங்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய வாக்கெடுப்பில் இறப்புக்குப் பின் மிகச் சிறந்த இந்தியராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சட்ட மேதை அம்பேத்கர்  பெயரை பிழைப்பிற்காக பயன்படுத்தி வரும் இச்சூழலில், இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக அம்பேத்கர் பணியாற்றியதை நினைவு கூறும் வகையில், திருச்சி, திருவெறும்பூர் பாய்லர் ஆலை அம்பேத்கர் அரும்பணி மன்றம் சார்பில், திருச்சி மத்திய பேரூந்து நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தியிருப்பது உண்மையிலுமே பாராட்டத்தக்கது.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com