ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், பேராசிரியர்கள் நக்சலைட்டுகள்: சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்!

S.Swamy

நரேந்திரமோதி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் எப்படியாவது சக்தி வாய்ந்த இலாக்காவிற்கு அமைச்சராகிவிட வேண்டும் என்ற முனைப்போடு சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து முயற்சித்து வருகிறார். அதற்காக பிரதமர் நரேந்திரமோதிக்கு நெருக்கமான முக்கியமான ஆன்மீகவாதிகளிடம் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்.

சுப்பிரமணியன் சுவாமிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் அவர் பிரதமர் நரேந்திரமோதி கட்டுப்பாட்டில் இருக்கமாட்டார். சுப்பிரமணியன் சுவாமி செயலால் அரசுக்கு அவப்பெயர்தான் கிடைக்கும். இதனால்தான் பிரதமர் நரேந்திரமோதி இவ்விசயத்தில் தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு சுப்பிரமணியன் சுவாமியை துணை வேந்தராக நியமிக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் முன்வந்ததாகவும், ஆனால், அந்த பதவியை ஏற்றுக்கொள்ள சுப்பிரமணியன் சுவாமி சில நிபந்தனைகளை விதித்ததாகவும் செய்தி வெளியானது.

ஆனால், இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. 

ss twitter.pnga ss twitter

தனக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை என்ற விரக்தியில், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை நகசலைட்டுகள் என்று சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த பேச்சுக்கு அப்பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை நக்சலைட்டுகள் என்று விமர்சித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி மீது, பிரதமர் நரேந்திரமோதி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து தேசவிரோத கருத்துக்களை வெளியிட்டு வரும் சுப்பிரமணியன் சுவாமிக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்.

 டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com