ஓட்டலை சுற்றிலும் 4 குண்டுகள்! ஓட்டலுக்குள் இரண்டு குண்டுகள்! சாப்பிட வந்தவர்களை பிணைக்கைதிகளாக வைத்துள்ள பயங்கரவாதிகள்!- அச்சத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா!

lindtcafe1lindtcafe2lindtcafe

lindtcafef

lindtcafe p

city limit city limit1 city limit2

ஆஸ்திரேலியா, சிட்னியில் லின்ட் ஒட்டலில் பயங்கரவாதிகள் நுழைந்து வெயிட்டர்கள் மற்றும் சாப்பிட வந்தவர்களை துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக வைத்துள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் ஆஸ்திரேலியா அதிரபடி படை போலீசார் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். 

ஓட்டலை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் பயங்கரவாதிகள் போலீசாருடன் பேசியுள்ளனர். இதில் ஓட்டலை சுற்றிலும் 4 குண்டுகள் வைத்துள்ளோம். ஓட்டலுக்குள் இரண்டு குண்டுகள் வைத்துள்ளோம். எப்போது வேண்டுமானாலும் வெடிக்க செய்ய முடியும் என எச்சரித்துள்ளனர்.

மேலும், ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அப்போட்டை எங்களிடம் பேச சொல்லுங்கள் என்றும் கட்டளையிட்டுள்ளனர். 

பயங்கரவாதிகள் பிடியில் இருந்து 5 பேர் தப்பி ஓடி வந்துள்ளனர். இவர்களும் பயங்கரவாதிகள் குண்டு வைத்திருப்பதை ஒத்து கொண்டனர்.

பயங்கரவாதிகள் கறுப்பு உடை அணிந்திருப்பதாகவும், வெள்ளை பண்டானா அணிந்துள்ளனர் என்றும், இவர்கள் 40 முதல் 50 வயது வரை இருக்கலாம் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டுள்ளது. இந்தியர்களுக்கான ஹெல்ப்லைன் எண்: 0061-481453550 அறிவிக்கப்பட்டுள்ளது.

பிணைக்கைதிகளை மீட்கும் பணியில் தேசிய பாதுக்காப்பு படை போலீசாரும் இணைந்துள்ளனர். 

-ஆர்.மார்ஷல்.