மலைவாழ் மக்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்!

ye1112P1ஏற்காடு தாலுக்கா, மாரமங்கலம் கிராமத்தில் தமிழ்நாடு செட்யூல்டு டிரைப் சார்பில் மலைவாழ் மக்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் சேலம் மாவட்ட எஸ்.பி.சக்திவேல் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும்போது மலைவாழ் மக்கள் அறியாமையின் காரணமாக செம்மரம் வெட்ட அதிகளவில் செல்வதாகவும், அவ்வாறு செல்வதால் குடும்பத்தினருக்கே தெரியாமல் சிறையில் கிடந்து வாடுவதாகவும், எனவே, மக்கள் யாரும் செம்மரம் வெட்ட கண்டிப்பாக செல்ல கூடாது என்றார்.

மேலும் கிராம மக்கள் காவல் துறையினரை கண்டு பயப்படுவதை கைவிட வேண்டும், காவல் துறையினர் மக்களின் நண்பனாகவே செயல்பட்டு வருகிறது, எனவே, மக்களும் காவல்துறையினரிடம் எளிதில் பழகி கிராமங்களில் நடக்கும் குற்றங்களை காவல் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் சேலம் ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி சந்திர சேகரன், ஏற்காடு இன்ஸ்பெக்டர் குமார், தமிழ்நாடு செட்யூல்டு டிரைப் ஏற்காடு வட்ட தலைவர் சுந்தரராஜன், பொருளாளர் ஆண்டி உட்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

-நவீன் குமார்.