பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றி திறியும் மாடுகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: செங்கம் ஊராட்சி ஒன்றிய குழுக்கூட்டத்தில் தீர்மானம்!

IMAGE 03திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றிய குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சேமசுந்தரம் முன்னிலை வகித்தார். மேலாளர் மகாதேவன் வரவேற்று பேசினார். கூட்ட தீர்மானங்களை இளநிலை உதவியாளர் சுப்பிரமணி வாசித்தார்.

செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பகுதியில் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றி திறியும் மாடுகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

செங்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூடுதலாக செய்வது அரசங்கன்னி, மேல்வணக்கம்பாடி கிராமங்களில் ஆண்கள் சுகாதார வளாகம் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் பல்வேறு செலவினங்கள் உட்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய குழு துணைத்தலைவர் சாமிநாதன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

-செங்கம் மா.சரவணக்குமார்.