கடற்கரையை சுத்தபடுத்தும் பணி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் துவக்கி வைத்தார்!

dcp4சர்வதேச கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியின் ஒரு அங்கமாக ஸ்பின் நகர் அரிமா சங்கம், லியோ சங்கம் ஆகியவை இdcp1ணைந்து தூத்துக்குடி துறைமுக கடற்கரையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இப்பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். பிளாஸ்டிக்கை ஒழிப்போம், பூமியை காப்போம் என்று பிளாஸ்டிக் உபயோகத்தினை தவிர்க்கும் துண்டு பிரசுரங்களை வெளியிட்டார். இப்பணியில் கடலோர காவல் படையினர், ஸ்பிக் உறுப்பினர்கள், என்.டி.டி.எப்.இன்ஸ்டுட் மாணவர்கள், ஸ்பிக் நகர் பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு கடற்கரை பகுதிகளில் இருந்த குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை சுத்தம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஸ்பிக் பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன், உதவி பொது மேலாளர் பாலு, துறைமுக பொறுப்புக் கழக செயற்பொறியாளர் ஜெயக்கொடி, மக்கள் தொடர்பு அலுவலர் சசிராஜ், ஸ்பிக் நகர் அரிமா சங்க தலைவர் ராஜேஷ் குமார், செயலாளர் கிரிபாலாஜி, பொறுப்பாளர் சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-பி.கணேசன் @ இசக்கி.