இரத்த தானம் முகாம்!

ye1909P1ஏற்காடு சேர்வராய்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘நாட்டு நலப்பணி திட்டம்’ சார்பாக, இரத்த தான முகாம் கல்லூரி வளாகத்தில் இன்று நடைப்பெற்றது.

வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சேர்வராய்ஸ் கலைக் கல்லூரி இணைந்து செப்டம்பர் 24 உலக என்.எஸ்.எஸ். தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாமை நடத்தினர்.

நிகழ்ச்சியில் கல்லூரி மேலாண்மை இயக்குனர் தேவதாஸ். எக்ஸ் எம்.பி, மற்றும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவர், ரவீந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் உஷா, சுரேஷ் பிரசன்னா மற்றும் கல்லுரி முதல்வர் கிருபாகரன், மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனையின் மருத்துவர் ரவீந்திரன் பேசுகையில் சராசரியாக மனித உடலில் 4000 முதல் 6000 மி.லி இரத்தம் இருக்கும், நாம் தானமாக வழங்குவது 350 மி.லி மட்டுமே. இவ்வாறு செய்வதானால் நமது உடலில் இரத்த இழப்பு ஏற்படுவது பழகிவிடும்.

இரத்த தானம்செய்பவர்களை நமது சமூகம் கடவுளுக்கு நிகராக பார்க்கிறது என்று, இரத்த தான சிறப்பு பற்றி மாணவ, மாணவிகளிடையே உரையாற்றினார்.

-நவீன் குமார்.