காவல்துறைக்கு களங்கம் விளைவிக்கும் தினமலர் ஊடகம்!

dinamalarகட்டண பாக்கியால், பொதுமக்களின் அவசர உதவிக்கு பயன்பட வேண்டிய காவல் நிலைய தொலைபேசி இணைப்பு, கடந்த ஒரு மாதமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

நகை பறிப்பு, கோஷ்டி மோதல், விபத்து மற்றும் தீ விபத்து உள்ளிட்ட அவசர உதவிக்காக செங்குன்றம் காவல் நிலையத்தின் 044 – 26418296 என்ற தொலைபேசி எண்ணை, கடந்த ஒரு மாதமாக தொடர்பு கொள்ள முடியவில்லை.

அதிகாரிகளின் அலைபேசி எண்கள் தெரியாத பொதுமக்கள், அந்த நிலையத்தின் தொலைபேசி எண்ணும் இயங்காததால், அவசர உதவி மற்றும் பாதுகாப்பு கிடைக்காமல் பரிதவிக்கின்றனர். நிலையத்தின் பணியில் உள்ள மற்றவர்களை அலைபேசி, ‘மைக்’ மூலம் தொடர்பு கொள்ள முடியாத மற்ற போலீஸ் அதிகாரிகளும், பொதுமக்களை போன்றே ஏமாற்றமடைகின்றனர்.

தொலைபேசி பயன்பாட்டிற்கு, 8,000 ரூபாய் கட்டண பாக்கி உள்ளதால், அதன் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது. விரைவில் தொலைபேசி சேவை தொடர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று தினமலர் ஊடகம் 17 மே2014, 22:34(இரவு10.34) மணிக்கு இணைய தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக உண்மை நிலையை அறிவதற்காக இன்று (18.05.2014) இரவு 9 மணிக்கு 044 – 26418296 என்ற செங்குன்றம் காவல் நிலைய தொலைபேசி எண்ணிற்கு, 0431-2201640 என்ற எமது “உள்ளாட்சித்தகவல்” அலுவலக தொலைபேசி எண்ணிலிருந்து தொடர்பு கொண்டோம். தொடர்பு கொண்ட உடனே செங்குன்றம் காவல் நிலைய பணியிலிருந்த நபர் நம்மிடம் பேசினார்.

தினமலர் ஊடகத்தில் வெளிவந்த செய்தி குறித்து கேட்டோம். எந்த போன் வேலை செய்யவில்லை என்று எழுதி இருக்கிறார்களோ, அதே போனில் தானே சார் இப்போது நீங்க பேசுகிறீர்கள்? எங்கள் காவல் நிலைய போனில் எந்த பிரச்சனையும் இல்லை. போன் வேலைசெய்யாமல் போலிஸ் ஸ்டேஷன் செயல்பட முடியுமா? இது பொய்யான செய்தி என்று கூறினார்.

அடுத்து இன்று (18.05.2014) இரவு 9.51 மணிக்கு 98424 14040 என்ற “உள்ளாட்சித்தகவல்” அலைபேசி எண்ணில் இருந்து, 98404 24214 என்ற செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சம்பத் அவர்களின் அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு, தினமலர் ஊடகத்தில் வெளிவந்த செய்தி குறித்து கேட்டோம்.

எங்கள் காவல் நிலைய போனில் எந்த பிரச்சனையும் இல்லை. கட்டண பாக்கியும் இல்லை. இது பொய்யான செய்தி என்று கூறினார்.

உண்மையின் உரைகல்லின் லட்சணம் இதுதானா? இதற்கு ‘தினமலர்’ ஊடகம் என்ன பதில் சொல்ல போகிறது?

-டாக்டர்.துரைபெஞ்சமின்.