பிரபாகரன் சரணடைந்திருந்தால் இன்று ராஜபக்ஷவின் குடும்பத்துடன் இருந்திருப்பார் : முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா!

 Sri Lanka's former army chief Sarath Fonஇராணுவத்திடம் பிரபாகரன் சரணடைந்திருந்தால் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்துடன் இன்று இருந்திருப்பார் என்று முன்னாள் ராணுவத்தளபதியும் புதிய ஜனநாயக் கட்சியின் செயலாளருமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் சனிக்கிழமை (07.09.2013) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் முக்கியமானத்  தலைவர்கள் எவரும் சரணைடையவில்லை. சரணடைந்தவர்கள் இப்போது ராஜபக்ஷ குடும்பத்துடன் இருக்கின்றார்கள். குறிப்பாக கே.பி மற்றும் தயாமாஸ்டர் போன்றவர்கள் இப்போது மஹிந்தவின் குடும்பத்துடன்தான் இருக்கின்றனர். பிரபாகரன் சரணடைந்திருந்தாலும் மகிந்தவின் குடும்பத்துடன் இருந்திருப்பார். அத்தோடு அவர் முதலமைச்சர் பதவியும் வகித்திருப்பார் என்று  அவர் தெரிவித்தார்.

Leave a Reply