வழக்கு விசாரணையில் குறுக்கிட்ட சுப்ரமணியன்சுவாமிக்கு முகத்தில் கரியைப் பூசிய, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

Altamas-KabirSubramaniam-Swamy-Supreme-court2 ஜி வழக்கில் சலங்கை கட்டி ஆடிய சுப்ரமணியன்சுவாமி, கேரள மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்ட வழக்கிலும் உச்ச நீதிமன்றத்தில் வேசம் கட்ட முற்பட்ட போது நீதிபதி அல்தமஸ் கபீர்; இது தலைமை வழக்கறிஞர்கள் அமரும் இடம்.. சாலையில் போவோர் வருவோர் வந்து அமரும் இடம் இல்லை என மிகவும் கடுமையாக சுப்ரமணியன்சுவாமியை எச்சரிக்க… அவமானத்தால் கூனி குறுகி தலை குணிந்தவாறு சுப்ரமணியன்சுவாமி நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.

 மீனவர்கள் சுட்டுகொல்லப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்த சமயத்தில் வழக்கு விசாரணையில் இடை புகுந்த சுப்ரமணியன்சுவாமி,  நீதிபதியிடம் மத்திய அரசு இத்தாலி மீனவர்களை காப்பாற்ற முனைகிறது அதனை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எழுந்து நின்று சத்தமாக கூறினார்.

நீதிபதி :(கோபத்துடன்) யார் நீங்கள்…?

சுப்ரமணியன்சுவாமி : நானும் இவ்வழக்கின் மனுதாரர்

நீதிபதி :தற்போது நடந்து கொண்டு இருக்கும் வழக்கின் விசாரணை நடைபெறும் வரையில் தாங்கள் இதில் தலையிட அனுமதி இல்லை…

சுப்ரமணியன்சுவாமி: (கோபத்துடன்) என் மனுவையும் தாங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்….

நீதிபதி: (கடும் கோபத்துடன்) மிஸ்டர் சுப்பிரமனிய சாமி என்ன பேசுகிறோம் என்று யோசித்து பேசுங்கள்..

சுப்ரமணியன்சுவாமி :சட்டம் என்ன சொல்கிறது என்றால்….
(சட்டம் பற்றி விளக்குகிறார்)

நீதிபதி :நான் சட்டம் படித்ததனால் தான் இந்த இருக்கையிலே அமர்ந்து இருக்கிறேன்..எனக்கு சட்டம் பற்றி பாடம் நடத்த வேண்டாம்…சட்டம் என்றால் என்னவென்று உங்களுக்கு நான் சொல்லித்தரவா…? நீதிமன்றத்தில் முன் வரிசை இருக்கை யாருக்கு உரியது..? தலைமை வழக்கறிஞர்களுக்கு உள்ள இருக்கையில் அவர்களை அமரவிடாமல் முண்டி அடித்துகொண்டு தாங்கள் அமர்ந்து கொண்டு வழக்கின் விசாரனையில் குறுக்கிடும் நீங்கள் யார்? பலமுறை இதே போன்று செய்துள்ளீர்கள்…. இது வழக்கறிஞர்கள் அமரும் இடம்..இது நீதிமன்றம்…அல்லாது சாலையில் போவோர் வருவோர்கெல்லாம் இந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு வீண் விவாதம் செய்யும் இடம் அல்ல….!

(அவமானத்தில்)
சுப்ரமணியன்சுவாமி: என்னுடைய வழக்கின் போக்கை அறியவும், நான் வாதாடவும் நான் முன்வரிசையில் அமர்ந்து இருக்கிறேன்…

நீதிபதி: அப்படி ஒரு வழக்கு இங்கே நடைபெறவும் இல்லை..உங்களின் வழக்கினை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் இல்லை..நீதிமன்றம் சம்மதம் தராத வழக்கில் தாங்கள் வாதாட  தங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது? நீதிமன்றத்திற்கு பாடம் கற்பித்து தர துணியாதீர்கள்!

சுப்ரமணியன்சுவாமி: (கோபமாக) என்னை வெளியே போக சொல்லவேண்டும் என்பது தான் உங்களின் விருப்பமா..?

நீதிபதி; அப்படியில்லை.இது நீதிமன்றம் இங்கே நடைபெறும் காரியங்களை தீர்மாணிப்பவன் நான்… தாங்களல்ல…

சுப்ரமணியன்சுவாமி: அப்படி என்றால் என் மனுவை தள்ளுபடி செய்து கொள்ளுங்கள்……
என்றவாறு சுப்ரமணியன்சுவாமி நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.

உண்மையில் சுப்ரமணியன்சுவாமியின் மனு மீதான விசாரணை இன்னும் நீதிமன்றத்தின் பார்வைக்கு வரவில்லை…இருப்பினும் தன் அதிரடி வாத திறமைகளால் வழக்கினை தன் போக்கிற்கு இழுத்து செல்ல சுப்ரமணியன்சுவாமி துணிந்த போது நீதிபதி மிகவும் ஆத்திரமடைந்து சுப்ரமணியன்சுவாமி விட்டு விளாச, தன் பெயரை சொல்லி நீதிபதி அவமானபடுத்தியது சுப்ரமணியன்சுவாமிக்கு பெரும் தலைகுணிவை தரும் நிகழ்வாக அமைந்து விட்டது. இதற்கு முந்தைய பல வழக்குகளில் தன் அதிரடி நடவடிக்கைகளால் உச்ச நீதிமன்றதை ஆட்டிப் படைத்த சுப்ரமணியன்சுவாமி, இந்த முறை மிக சரியாக கரி பூசப்பட்டு வெளியே பிடித்து தள்ளாத குறையாக அனுப்பி வைக்கப்பட்டார்.

Leave a Reply