நாட்டில் என்னை மாத்திரமல்ல, நீதித்துறையின் சுதந்திரமும் கொலை செய்யப்பட்டு விட்டது! -இலங்கை முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க

Chief Justice Shirani    Bandaranayake.

Chief Justice Shirani Bandaranayake.

வெளிநாடுகளில் இருந்து ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் நோக்குடன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. இது குறித்து சட்டத்தரணிகள் ஒன்றியத்தின் முக்கிஸ்தர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

 குற்றப்பிரேரணை முன்வைக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எனக்காக பாடுபட்டவர்களை கைவிட்டு விட்டு எனது உயிரைக் காத்துக் கொள்வதற்கு நான் வெளிநாட்டுக்கு செல்ல மாட்டேன்.

நம்பிக்கையில்லாத தீர்மானம் தொடர்பில் உயிரை பணயம் வைத்து செயற்பட்டவர்களை கைவிட்டு விட்டு தமது உயிரை மாத்திரம் காப்பாற்றிக் கொள்வதற்கான எந்த தேவையும் தமக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் என்னை மாத்திரமல்ல தற்போது நீதித்துறையின் சுதந்திரமும் கொலை செய்யப்பட்டு விட்டது. இதற்குப் பின்னர் கொலை செய்வதற்கு எதுமில்லை. இருப்பினும் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக நான் தனிப்பட்ட ரீதியாக குரல் கொடுக்கவில்லை. நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தேன். இதன் போது என்னுடன் மேலும் பலர் இணைந்து குரல் கொடுத்தனர். தற்போது அவர்களின் உயிர்களுக்கும் அச்சுறுத்தல் உள்ளது.

இவ்வாறான நிலையில் எனது உயிரை மாத்திரம் பாதுகாக்கும் நோக்கில் எங்கும் செல்ல போவதில்லை. இது எனது நாடு ,எனது மக்கள் என முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

.

Leave a Reply