சிறுத்தை புலிகளை பாதுகாப்பதற்கான மறுசீரமைக்கப்பட்ட திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி இம்மாதம் 17-ஆம் தேதி தொடங்கிவைக்கவுள்ளதாக மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

சிறுத்தை புலிகளை பாதுகாப்பதற்கான மறுசீரமைக்கப்பட்ட திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி இம்மாதம் 17-ஆம் தேதி தொடங்கிவைக்கவுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஒடிஷா மாநிலம் புவனேஷ்வரில் வன உயிரியல் பூங்கா இயக்குனர்களின் தேசிய அளவிலான மாநாட்டில் அவர் இதை தெரிவித்தார்.1950-ஆம் ஆண்டுக்கு பிறகு, சிறுத்தை புலிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்துவருவது குறித்து குறிப்பிட்ட அவர், வன உயிரியல் பூங்காக்களில், விலங்குகளின் முக்கியத்துவம் குறித்தும், சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply