கோவிட் பாதிப்பை அடுத்து, நாடுமுழுவதும் சுகாதார கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட் தொற்றை கண்டறிவதற்கான ஆய்வகங்களின் எண்ணிக்கை மூவாயிரத்து 326ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஒரேயொரு ஆய்வகம் மட்டுமே செயல்பாட்டில் இருந்ததையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையே, தமிழகத்தில் கோவிட் தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் 1 லட்சம் இடங்களில் இன்று நடைபெற்று வருகிறது.தஞ்சாவூரில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார்.நிலத்தில் தொற்று பாதிப்பு குறைவாக இருப்பதால், ஊரடங்கு தேவையில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
திவாஹர்
