பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையின் கீழ், தேசிய நெடுஞ்சாலைகள் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் வளர்ச்சியடைந்து வருவதாக, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள தொடர் டுவிட்டர் பதிவில், என்எச்-334-பி 93% பணிகளுடன் நிறைவை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், 3 மாதங்களுக்கு முன்பே 2022 ஜனவரியில் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
உ.பி/அரியானா எல்லையில் (பாக்பத்) தொடங்கும் என்எச்-334-பி, ரோகனில் முடிவடைகிறது. இது பல சாலைகளை இணைக்கிறது. சண்டிகர், தில்லி பயணிகளுக்கும் இது நேரடி இணைப்பை வழங்குகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
–எம்.பிரபாகரன்
