மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்க கூடாது!-பிரதமர் நரேந்திர மோதிக்கு விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எழுதிய கடிதம்.

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தி, கரூர் மாவட்டம், ஒரு காலத்தில் ‘குளிர்தண்டலை’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட தற்போதைய குளித்தலை பகுதியிலிருந்து, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாரத பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

கர்நாடக அரசு பெங்களூரில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவிலும் தமிழக எல்லைக்கு 4 கிலோமீட்டர் முன்னதாக ரமாநகரா மாவட்டத்தில் மேகேதாட்டுவில் ஒரு நீர்த்தேக்கத்தை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் பற்றிய விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியதை
நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

மேகதாது அணை தமிழகத்திற்கு நன்மை பயக்கும் என்றும் கர்நாடக மாநிலம் கூறினாலும் மேகதாது மண்டலம் காவிரியிலிருந்து தண்ணீர் கீழ்மாநிலமான தமிழக நோக்கி செல்லும் இறுதியான தடையற்ற பகுதியாகும். எனவே, அங்கு அணை கட்டுவதால் தமிழகத்தின் நியாயமான பங்கு தண்ணீரை விடுவிக்க கர்நாடகத்தை நம்பி இருக்கும் நிலைக்கு தள்ளப்படும்.

புதிய அணை கட்டப்பட்டால் கர்நாடகா தமது தேவைக்கு போக மிஞ்சிய அளவு நீரை மட்டுமே தமிழகத்திற்கு திறந்து விடும். எனவே, தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்கள் கர்நாடக மேகதாதுவில் புதிய அணை கட்டும் முயற்சியை எதிர்க்கிறோம்.

எனவே, மாண்புமிகு பிரதமர் எங்கள் கோரிக்கையை பரிசீலித்து கர்நாடகா மாநிலம் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எந்த அனுமதியும் வழங்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், எங்கள் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் 3000 விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் ஆகியோர்களின் கையெழுத்துக்களை தங்கள் மேலான பார்வைக்கு இணைத்துள்ளோம். தயவுகூர்ந்து தமிழக விவசாயிகள் மற்றும் விவசாயத்தை காப்பாற்றுங்கள் என தங்களை பணிந்து வேண்டுகிறோம் என இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கையெழுத்து இயக்க நிகழ்ச்சியினை சமூக ஆர்வலர்கள் முருகானந்தம், சுந்தர் மற்றும் மது ஆகியோர் ஒருங்கிணைத்து அனுப்பி வைத்துள்ளனர்.

கே.பி.சுகுமார்
UTL MEDIA TEAM
ullatchithagval@gmail.com

Leave a Reply