முன்னாள் மத்திய அமைச்சர் பி.ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி நேற்று (06.07.2021) இரவு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தென்மேற்கு டெல்லியில் உள்ள வசந்த் விஹாரில் தனியாக வசித்து வந்த கிட்டி குமாரமங்கலம், நேற்று அவர் வீட்டில் இருந்தபோது, கடந்த ஐந்து ஆண்டுகளாக அவருக்கு துணிகளை துவைத்து தரும் வேலை செய்துவந்த சலவை தொழிலாளி ராஜூ என்பவர், நேற்று (06.07.2021) இரவு 9.00 மணியளவில் கிட்டியின் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தியுள்ளார்.
தனது வேலையாள்தானே என்று நினைத்து; கிட்டி குமாரமங்கலம் கதவை திறந்துவிட, வீட்டுக்குள் நுழைந்த ராஜூ மற்றும் அவனது கூட்டாளிகளான இரண்டு வாலிபர்கள்; கிட்டியைத் தாக்கியதோடு; அவரை ஒரு அறைக்கு இழுத்துச் சென்று தலையணையால் அழுத்தி அவரை கொலை செய்துள்ளனர்.
நேற்று (06.07.2021) இரவு 11.00 மணியளவில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்மேற்கு டெல்லியின் துணை காவல் ஆணையர் இங்கிட் பிரதாப் சிங் தலைமையிலான போலீசார், சலவை தொழிலாளி ராஜூவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், ராஜூவின் இரண்டு கூட்டாளிகளைப் பிடிப்பதற்காக இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடிவருகின்றனர்.
கிட்டி குமாரமங்கலம் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலம் முதலே குமாரமங்கல வகையறாக்களின் மரணங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் மர்மமாகவே இன்று வரை இருந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது கிட்டி குமாரமங்கலத்தின் கொலையும் அமைந்துள்ளது.
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
