சேலம் மாவட்டம், ஏற்காடு, மாரங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சுண்டக்காடு கிராமத்தை சேர்ந்த சின்னமணி மனைவி ரத்தினத்திற்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டு, 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த 108 ஆம்புலன்சில், ரத்தினம் ஏற்றப்பட்டு, வாழவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வரும் வழியிலேயே ரத்தினத்திற்கு பிரசவ வலி அதிகரிக்க, மருத்துவர் அர்ஜூன், ரத்தினத்திற்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். இன்று காலை 7.30 மணியளவில் ரத்தினத்திற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழுந்தையும் நல்ல நிலையில் வாழவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர்.
-நவீன் குமார்.
