மின்துறை சீர்திருத்தங்களை விரைவுபடுத்த மாநில மின்துறை அமைச்சர்கள் மாநாட்டில் முடிவு.

மத்திய மின்துறை அமைச்சர் திரு மனோகர் லால் தலைமையில், இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநில மின்சாரத் துறை அமைச்சர்கள் மாநாடு புதுதில்லியில் நேற்று (2026 நவம்பர் 28) நிறைவடைந்தது. இதில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்கள்/பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மக்களுக்கு நம்பகமான, குறைந்த விலையிலான தடையற்ற மின்சாரம் வழங்க மத்திய அரசும் மாநிலங்களும் இணைந்து செயல்பட இந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் சில:

* மாநிலங்கள் தங்களது மின்சாரத் தேவைக்கான திட்டங்களை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

* மின்சாரச் சேமிப்பு வசதிகளை 15 மடங்கு அதிகரிக்க வேண்டும். பேட்டரி, நீரேற்று மின் சேமிப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

* அதிக மின் கட்டணம் குறித்த புகார்களை விசாரிக்க சோதனை மீட்டர்கள் பொருத்த வேண்டும். தீர்க்கப்படாத புகார்களை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

* 2047-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுமின் உற்பத்தித் திறனை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் 2027 மார்ச் மாதத்திற்குள் மின்சார இணைப்பு வழங்க வேண்டும்.

மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் தான் இந்த மாநாட்டின் உண்மையான வெற்றி உள்ளது என்று மத்திய மின்துறை அமைச்சர் திரு மனோகர் லால் தெரிவித்தார். மின்துறையை மேலும் வலுப்படுத்த மத்திய மாநில அரசுகளும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply