மகாராஷ்டிர மாநிலம், கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில், 151-வது பிரிவின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு இன்று (2026 நவம்பர் 29) நடைபெற்றது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார்.
மாறிவரும் உலகலாவிய பாதுகாப்புச் சூழலில், தேசிய பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்ள உள்நாட்டிலேயே புதிய தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இணையவெளி, விண்வெளி, செயற்கை நுண்ணறிவு ஆகியவை போர் முறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை பாதுகாப்புப் படையினர் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
எதிர்காலத்தில் மனித ஆற்றலுடன் இயந்திரத் திறனும் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார். எனவே, அறிவாற்றல், உழைப்பு ஆகியவற்றை இணைத்து இந்தியாவின் திறனை உலக அளவில் உயர்த்த இளைஞர்கள் பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ராணுவப் பொறுப்புகளில் நம்பிக்கை, குழு ஒற்றுமை, மனவலிமை, பொறுமை, தன்னம்பிக்கை ஆகியவை அவசியம் என்றும் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
இந்த அணிவகுப்பில் மொத்தம் 1,250 பேர் பங்கேற்றனர். அவர்களில் 369 பேர் பயிற்சியை நிறைவு செய்தவர்கள். ஒட்டுமொத்தத் தகுதி வரிசையில் முதலிடம் பெற்ற திரு அன்கித் குமார் சிங்கிற்கு தங்கப் பதக்கமும், இரண்டாமிடம் பெற்ற திரு சார்தக்ராஜ் சாகர் பாட்டீலுக்கு வெள்ளிப் பதக்கமும், மூன்றாமிடம் பெற்ற திரு ரிஷிக்கு வெண்கலப் பதக்கமும் வழங்கப்பட்டன. தொடர்ந்து, சுகோய்-30 போர் விமானங்களின் வான் சாகசம் நடைபெற்றது.
திவாஹர்
