இந்தியா – ஜப்பான் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இருநாட்டு பாதுகாப்பு அமைச்சர்கள் பிலிப்பைன்ஸில் பேச்சுவார்த்தை.

பிலிப்பைன்ஸில் செபுவில் 2026 அக்டோபர் 28 அன்று நடைபெற்ற ஆசியன் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கிடையே, பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் திரு ஷின்ஜிரோ கொய்ஸூமி ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.

ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சந்திப்பிற்குப் பின், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு இருநாட்டு அமைச்சர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

இருதரப்பினரிடையே உத்திசார்ந்த, செயல்பாட்டுத் தேவைகளை நிறைவுசெய்யக்கூடிய உறுதிமிக்க கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான விவாதங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவற்றில் கண்ணிவெடி தடுப்புத் திறன்களை மேம்படுத்துதல், ஜப்பான் தொழில்நுட்ப நிபுணத்துவம், இந்தியாவின் உற்பத்தித் திறன்கள் மூலம், கடற்படை கட்டுமானம், வடிவமைப்பில் கூட்டு வளர்ச்சிக்கான வாய்ப்பை ஆராய்தல் ஆகியவை அடங்கும்.

இந்தியா – ஜப்பான் விமானப்படைகளின் வீர் கார்டியன் 26 பயிற்சியின்போது ஜப்பான் வான்வெளி தற்காப்புப் படையின் போர் விமானங்கள் முதன்முறையாக இந்தியா வந்தன. அத்துடன் ஜப்பான் வான்வெளி தற்காப்புப்படை தலைமைத்தளபதி இந்தியா வருகை தந்தார். இதுபோன்ற நிகழ்வுகளை அடுத்து இருநாட்டு வான் படைகளுக்கிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட விவாதங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply