திருச்சி சர்வதேச விமான நிலையம் வழியாக 45 ஊர்வனங்களை கடத்தும் முயற்சியை விமான புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து வருவாய் புலனாய்வு இயக்குநரகம் முறியடித்துள்ளது. உளவுத்தகவலின் அடிப்படையில் 2026 அக்டோபர் 26 அன்று பாங்காக்கில் இருந்து கொழும்பு வழியாக வந்த விமானத்தில் பயணித்த இரண்டு இந்தியப் பயணிகளை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது அவர்களுடைய உடைமைகளில் 27 உணவுப் பொட்டலங்களில் வனவிலங்குகளை உயிருடன் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
அவற்றில் 23 பாம்புகள், 16 மலைப்பாம்புகள், ஒரு வெள்ளை உடும்பு உள்ளிட்டவை அடங்கும். இதையடுத்து 1962-ம் ஆண்டு சுங்க சட்ட விதிகளின்படி இரண்டு பயணிகளும் கைதுசெய்யப்பட்டனர். உடைமைகளில் இருந்து மீட்கப்பட்ட வனவிலங்குகள் திருச்சி விமான புலனாய்வுப் பிரிவிடம் மேல் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டன.
இந்த நடவடிக்கை, உளவுத்துறை, சுங்க அதிகாரிகளுடனான நெருங்கிய ஒத்துழைப்பின் மூலம் நாட்டிற்குள் சட்டவிரோதமாக வனவிலங்குகள் கொண்டுவரப்படுவதை தடுப்பதில் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டுகிறது.
திவாஹர்
