சபாஷ்! சம்பவம் நடந்த 36 மணி நேரத்திற்குள் தப்பியோடிய 17 சிறைக் கைதிகளையும் உண்மையிலுமே வலை வீசித் தேடி கைது செய்த தமிழ்நாடு காவல்துறையினர்!

தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்ட சிறையிலிருந்து 26.10.2026 அன்று இரவு பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 17 சிறைக் கைதிகள் தப்பியோடினர். இதையடுத்து, தமிழ்நாடு காவல்துறை (DGP )தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தீவிரத் தேடுதல் வேட்டைமேற்கொள்ளப்பட்டது.

இதன் விளைவாக சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் 13 சிறைக் கைதிகளை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், மீதமிருந்த 4 கைதிகளையும் சம்பவம் நடந்த 36 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் பிடித்து தங்கள் கடமையை சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.

தமிழ்நாடு காவல்துறையினர் உண்மையிலுமே திறமையானவர்கள் தான் என்பதை இதன் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

தவறு செய்யும் போது விமர்சனம் செய்யும் நாம், திறமையாகப் பணி செய்யும் போது அதைப் பாராட்டி தான் ஆக வேண்டும். அதுதான் உண்மையான அறம்! அதுதான் இதழியல் ஊடக தர்மம்.

இது தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பைக் “கிளிக்’ செய்யவும். https://www.ullatchithagaval.com/2026/10/27/124965/

Leave a Reply