மகாராஷ்ட்டிராவில் சவுக்-கர்ஜத் ரயில் பிரிவை ரு.497 கோடி செலவில் இரட்டைப் ரயில் பாதையாக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்துத் திறனை மேம்படுத்த 10.86 கி.மீ. தொலைவுக்கு இந்த இரட்டை ரயில் பாதைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. திட்டம் முடிவடைந்ததும், கூடுதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தத் திட்டத்தால் ஆண்டுக்கு 18.35 மில்லியன் டன் அளவுக்கு சரக்குப் போக்குவரத்தை கையாள முடியும். இரட்டை ரயில் பாதை திட்டத்தால், சரக்கு ரயில்களின் தாமதத்தையும் குறைக்க முடியும். ரயில்வே உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், பயணிகள், சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இந்திய ரயில்வே தொடர்ந்து கவனம் செலுத்துவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திவாஹர்
