இந்தியா – நேபாள் இடையே வர்த்தகம், போக்குவரத்து அங்கீகரிக்கப்படாத வணிக நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தை.

இந்தியா – நேபாளம் நாடுகளிடையே வர்த்தகம், போக்குவரத்து அங்கீகரிக்கப்படாத வணிக நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது.

இம்மாதம் 16, 17-ம் தேதிகளில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வர்த்தகத்துறை இணைச் செயலாளர் திரு உஜ்வல்குமார் கோஷ் தலைமையிலான இந்தியப் பிரதிநிதிகள் குழுவும் நேபாள நாட்டில் தொழில்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு புத்த பகதூர் குருங் தலைமையிலான பிரதிநிதி குழுவும் பங்கேற்றன.

இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், அது சார்ந்த சிக்கல்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்வதற்கும் தர நிலைகள் உணவுப்பாதுகாப்பு, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், ஆயுஷ் தாயாரிப்புகள், எல்லைப் பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள், ரயில், சாலை, போக்குவரத்து இணைப்பு வசதிகள், வர்த்தகம் சார்ந்த இதர அம்சங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையேயான சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்தும் வேளாண் விளைப்பொருட்கள் பால், உணவு, மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் தர நிலைகள் குறித்தும் விரிவாக பரிசீலிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே சரக்கு பரிமாற்றம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல், சுங்க நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்தல் ஆகியவை குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Leave a Reply