தேசிய மாணவர் படையின் (NCC) ஒரு முதன்மை சாகச நடவடிக்கையான, அகில இந்திய பெண்கள் உயரமான மலைப்பகுதி நீண்ட மலையேற்றப் பயணமான ‘அபராஜிதா – பரங் லா 2026’, 2026 செப்டம்பர் 16 அன்று லடாக்கின் கர்சோக்கில், NCC தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி திப்தி மோஹில் சாவ்லா ஆகியோரால் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் பயணத்தின் போது, நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 NCC பெண் மாணவியர் அடங்கிய குழு, இமாச்சலப் பிரதேசத்தின் ஸ்பிட்டி பள்ளத்தாக்கை லடாக்கின் சாங்தாங் பகுதியுடன் இணைக்கும் பரங் லா கணவாயை (5,578 மீட்டர்) கடந்து சென்றது.
30 நாட்களில் சுமார் 250 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்த இந்த வழித்தடம், பனியாறுகள், பனிப் பரப்புகள் மற்றும் ஆற்றுப் பள்ளத்தாக்குகள் உள்ளிட்ட உயரமான மலைப்பகுதிகள் வழியாகச் சென்றது. அதிகாரிகள், பயிற்றுனர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் துணைப் பணியாளர்களுடன் சென்ற இந்தக் குழு, இமாச்சலப் பிரதேசத்தின் கிப்பரிலிருந்து லடாக்கின் கர்சோக் வரையிலான மலையேற்றத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இந்த மலையேற்றத்தை, பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்கள் ஆகஸ்ட் 18, 2026 அன்று புது தில்லியிலிருந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய என்.சி.சி.யின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், இந்த சாகசப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக மாணவர்களுக்கும் பணியாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். இதுபோன்ற செயல்பாடுகள் இளைஞர்களிடையே தலைமைப் பண்பு, தன்னம்பிக்கை, குழுப்பணி மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை வளர்க்க உதவுகின்றன என்று அவர் கூறினார்.
எஸ்.சதிஸ் சர்மா
