பயங்கரவாதத்திற்கு எதிரான சகிப்புத்தன்மையற்ற கொள்கை என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையைத் தொடரும் வகையில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் ஷாசாத் பட்டி நெட்வொர்க்கை ஒரு பயங்கரவாத அமைப்பாக மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) அறிவித்துள்ளது என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று தெரிவித்தார்.
X தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், திரு அமித் ஷா இவ்வாறு கூறினார், “பயங்கரவாதத்திற்கு எதிரான சகிப்புத்தன்மையற்ற கொள்கை என்ற பிரதமர் திரு நரேந்திர மோடிஜியின் தொலைநோக்குப் பார்வையைத் தொடரும் வகையில், உள்துறை அமைச்சகம் ஷாசாத் பட்டி நெட்வொர்க்கை யுஏபிஏ சட்டத்தின் கீழ் ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கிறது.”
இந்தக் குழு, இளைஞர்களையும் சிறு குற்றவாளிகளையும் பயங்கரவாதத்திற்குத் தூண்டுவதோடு மட்டுமல்லாமல், எல்லைகள் கடந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்களைக் கடத்துவதிலும் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பையும், மத நல்லிணக்கத்தின் அடித்தளத்தையும் குறிவைத்து, இந்தக் கும்பல் வெறுப்புணர்வைத் தூண்டும் டிஜிட்டல் உள்ளடக்கத்தையும் வெளியிட்டுள்ளது.
திவாஹர்
