ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி முள் புதருக்குள் கவிழ்ந்தது! கல்லணை சாலையில் நடந்த விபரீதம்.

திருச்சி – கல்லணை சாலை, புத்தாபுரம், கொங்கு நாச்சி அம்மன் கோவில் அருகில் இரவு நேரத்தில் அந்த வழியாக வந்த TN49 CS 9666 என்ற கருப்பு நிற கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி முள் புதருக்குள் கவிழ்ந்தது. இதில் கார் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்திற்கான உண்மையானக் காரணமும், காரில் பயணம் செய்தவர்களின் முழு விவரம் தெரியவில்லை. காரின் பின்பக்கக் கண்ணாடியில் வழக்கறிஞர் A. கந்த பழனி என்று எழுதப்பட்டிருக்கிறது.

விபத்துக்குள்ளான TN49 CS 9666 என்ற இந்த கார் தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி (RTO) வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் MAHINDRA BOLERO B6 BS-VIRTO என்று பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான இந்த கார் கனரக வாகனத்தின் (கிரேன்) உதவியுடன் இன்று (ஆகஸ்ட் 30, 2026) காலை மீட்கப்பட்டது. இந்த விபத்து நடந்த இடம் திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் சம்பந்தப்பட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply