தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தேர்வுகள் உட்பட, பொதுத் தேர்வுகளின், பாதுகாப்பு, வடிவமைப்பு, நிர்வாகம் தொடர்பான விரிவான சீர்திருத்தங்களை பரிந்துரைப்பதற்காக, திரு நந்தன் நிலேகனியைத் தலைவராகக் கொண்ட ஒரு உயர் நிலைப் பணிக்குழுவை மத்திய அரசு ஏற்கெனவே அமைத்திருந்தது.
நிறுவன அமைப்புகளையும் செயல்முறைகளையும் வலுப்படுத்துதல், தேர்வில் நேர்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்தல், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், தேர்வு கட்டமைப்பை மேம்படுத்துதல், மாணவர்களின் நலனைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை இந்தப் பணிக்குழு ஆராய்ந்து வருகிறது. வலுவான, பாதுகாப்பான, வெளிப்படையான, சமத்துவமான பொதுத் தேர்வு முறையை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
இந்தச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் அனுபவம், அறிவு, கண்ணோட்டங்கள் ஆகியவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என இக்குழு கருதுகிறது. எனவே, பின்வருபவர்களிடமிருந்து ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன:
- மாணவர்கள், தேர்வர்கள்;
- பெற்றோர்;
- ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள்;
- தேர்வு நடத்தும் அமைப்புகள்;
- துறைசார் நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள்;
பரிந்துரைகள் பின்வரும் பகுதிகள் தொடர்பானவையாக இருக்க வேண்டும்:
- பொதுத் தேர்வுகளை நடத்துதல், அவற்றின் பாதுகாப்பு;
- தேர்வு வடிவமைப்பு, மதிப்பீட்டு முறை;
- ஆளுகை, பொறுப்புணர்வு, ஏற்பாடுகள்;
- தேர்வு முறைகேடுகளைத் தடுத்தல், கண்டறிதல், தீர்வு காணுதல்;
- பாதுகாப்பான கணினி அடிப்படையிலான தேர்வு
- தொழில்நுட்பத்தின் பயன்பாடு;
- வெளிப்படைத்தன்மை, குறைதீர்ப்பு, சம்பந்தப்பட்ட தரப்பினருடனான தகவல் தொடர்பு;
- தேர்வு செயல்முறை முழுவதும் மாணவர்களின் நலனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள்;
திவாஹர்
