கூடுவாஞ்சேரி காவல் நிலைய போலீசார், இம்மாத தொடக்கத்தில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். மாணிக் உத்தீன் லஸ்கர் (22) மற்றும் பகாபதி மாஜி ஆகிய இருவரும் மணிப்பூர் மாநிலம், ஜிரிபாம் மாவட்டம், காஷிம்பூர் பகுதியில் கைது செய்யப்பட்டனர். இருவரும் மணிப்பூரில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, Transit Warrant பெறப்பட்ட பின்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளனர்
கே.பி.சுகுமார்
