நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் சென்னை, தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 57 பேர் நேபாளத்திற்கு ஆன்மிகச் சுற்றுலா சென்றனர்.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட பல மாநிலத்தைச் சேர்ந்த முதியோர்கள் சிக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நேபாள வெள்ளத்தில் சிக்கிய 384 சுற்றுலாப்பயணிகள் மாயமானதில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 105 பேர் மாயமானதும் மிகவும் வருத்தத்துக்குரியது.
நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள அனைவரையும் மீட்க துரிதமான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.
குறிப்பாக தமிழக அரசு மத்திய அரசுடன் உடனடியாக தொடர்பு கொண்டு நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த யாத்திரிகர்கள், அவர்களை அழைத்துச் சென்ற தனியார் டிராவல்ஸ் நிறுவன ஊழியர்கள் என அனைவரையும் பத்திரமாக மீட்க வலியுறுத்த வேண்டும்.
கைலாயத்திற்கு ஆன்மிகப் பயணமாக சென்று, நேபாளத்தில் மாயமான தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
கைலாயம் பயணத்திற்காக நேபாளம் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில் பலர் மீட்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
எஸ்.திவ்யா
