ஹரியானாவில் மருத்துவமனையில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.

ஹரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் 2026 ஆகஸ்ட் 16 அன்று மருத்துவப் பரிசோதனையின் போது 57 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. ரோஹ்தக்கில் உள்ள முதுநிலை மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் ஆகஸ்ட் 18 அன்று உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஹரியானா மாநில தலைமைச் செயலாளர், பானிபட் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தீவிர உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அப்பெண்ணுக்கு எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன் பரிசோதனைகளை மருத்துவர்கள் பரிந்துரைத்ததாகவும், சிடி ஸ்கேன் அறையில் இயந்திரத்தை இயக்கும் நபர் அவரை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply