மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் சந்தையில் சர்க்கரை விநியோகத்தை மேம்படுத்த உதவுகிறது. உள்நாட்டுச் சந்தையில் போதிய அளவு சர்க்கரை கிடைப்பதை உறுதி செய்வதற்கும் விநியோகத்தில் ஏற்படும் செயற்கையான தட்டுப்பாட்டைத் தடுப்பதற்கும் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அண்மையில் ஆலைகளிலிருந்து பெறப்படும் சர்க்கரையின் விலை 20 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. அதே சமயத்தில், சர்க்கரை மீதான சில்லறை விலையும் குறையத் தொடங்கி உள்ளன. சர்க்கரை விநியோகத்தை சீரான முறையில் மேற்கொள்வதன் மூலம் அதன் சில்லறை விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும், சர்க்கரையின் விலை அதன் கையிருப்பு, விநியோக நடவடிக்கைகளை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. மேலும், போதிய அளவிலான சர்க்கரை தட்டுபாடின்றி கிடைக்க ஏதுவாக மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
திவாஹர்
