நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய தமிழர்களில் 21 பேர் மீட்கப்பட்டதற்கு மத்திய மாநில அரசுகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட 21 தமிழர்கள் நேற்று இரவு சென்னை வந்தனர்.
கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டப் பகுதிகளைச் சேர்ந்த 100 கும் மேற்பட்டோர் நேபாள வெள்ளத்தில் சிக்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர்களில் 21 பேர் மீட்கப்பட்டு தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க தமிழக அரசு தொடர் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
மத்திய வெளியுறவுத் துறையின் மூலம் விரைந்து துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
மீட்புப் பணிகள் மூலம் தமிழர்கள் மீட்கப்பட்டதற்கு தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் மீட்புப் பணியினருக்கும், மத்திய மாநில அரசுகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் நேபாளத்தில் சிக்கியுள்ள மற்ற தமிழர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு, வீடு திரும்ப மத்திய, மாநில அரசுகள் அரசு தொடர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்
