நேபாள-சீன எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பல கிராமங்கள் அடித்துச் செல்லப்பட்டு, பலர் உயிரிழந்துள்ளனர். நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகள் இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
நேபாளத்தில் பல பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். இதில் இந்திய நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் இந்த வெள்ளத்தில் சிக்கி உள்ளனர். திபெத் பகுதியிலும் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
இதில் அதிமுக்கியமான துயரம் என்னவென்றால், நேபாளத்தின் ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் திபெத்தில் இருந்து பாயும் போட் கோஷி (Bhote Koshi) மற்றும் லெண்டே ஆற்றில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சீனா – நேபாளத்தை இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மிதேரி புல் (Miterepul) என்று அழைக்கப்படும் ரசுவகதி நட்புப் பாலம் (Friendship Bridge) அடித்துச் செல்லப்பட்டது.
இந்த வெள்ளப்பெருக்கில் பல கிராமங்கள், பாலங்கள் மற்றும் மின்சாரக் கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கெரூங் எல்லைப் பகுதியில் இருந்த சீனாவின் குடிவரவு அலுவலகமும் சேதமடைந்தது.
இந்நிலையில் வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு உண்மையானக் காரணம் என்ன? இதோ நேபாள அரசு வெளியிட்டுள்ள அறிக்கை மற்றும் அவற்றின் தமிழாக்கம் நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவுப் செய்துள்ளோம்.
-Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040. editorutlmedia@gmail.com
