வறட்சியை எதிர்கொள்ளுதல் என்ற நிலையிலிருந்து மீள்திறன் என்ற நிலைக்கு மாற வேண்டும்!- மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்.

வறட்சியால் பாதிக்கப்பட்டால் நிவாரணம் அளிப்பது என்ற நிலையிலிருந்து அதை தடுக்க முன்கூட்டியே செயல்படும் தொழில்நுட்பத்தால் இயங்கும் சூழலுக்கு மாறவேண்டும் என்று உலகநாடுகளுக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார். மங்கோலியாவின், உலன்பாதரில் நடைபெற்ற பாலைவனமயமாதலைத் தடுப்பதற்கான ஐநா உடன்படிக்கையின் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான 17-வது மாநாட்டில் வறட்சி மீள்திறனை விரைவுபடுத்துதல் என்ற தலைப்பில் அமைச்சர் நிலையிலான பேச்சுகளில் அவர் உரையாடினார். வறட்சி என்பது, எப்போதாவது ஏற்படும் நிகழ்வு அல்ல என்றும் அது வரையறுக்கக்கூடிய வளர்ச்சி சவால் ஆகும் என்றும் தெரிவித்தார். அதன் நீர் பாதுகாப்பு, உணவு முறைகள், பல்லுயிர் பெருக்கம், பொருளாதார ஸ்திரத் தன்மை ஆகியவற்றைப் பாதிப்பதாக கூறினார்.

முன்கூட்டியே, எச்சரிக்கை செய்தல், தணிப்பு நடவடிக்கை, நிவாரணம், சமூக மீள்திறன் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பலதரப்பு அணுகுமுறையை திரு யாதவ் எடுத்துரைத்தார். மழைப்பொழிவு கண்காணிப்பு, செயற்கைக்கோள் அடிப்படையிலான வறட்சி மதிப்பீடுகள் ஆகியவை அமைச்சகங்களுக்கிடையே, மாநில அளவிலான தயார் நிலையை ஏற்படுத்தி ஒரு வறட்சியான காலம் நெருக்கடியாக மாறாமல் இருப்பதை உறுதிசெய்வதாக குறிப்பிட்டார். நிலத்திற்கும், நீருக்கும் இடையேயான முக்கியத் தொடர்பை குறிப்பிட்ட அவர், நீரோட்டத்திற்கு முன்பாக வனத்தை மீட்டெடுங்கள் என்பதன் அடிப்படையில் மண்அரிப்பை குறைக்கவும், நீர் இருப்பைத் தக்கவைத்தலை மேம்படுத்தவும், நிலத்தடி நீரை மீண்டும் நிரப்பவும், நீர்ப்பிடிப்பு பகுதி, வனப்பகுதியில் உள்ள ஆற்றங்கரை மீது இந்தியா கவனம் செலுத்துவது குறித்து சுட்டிக்காட்டினார். ஆற்றை மறுசீரமைத்தல், பாரம்பரிய நீர்நிலைகளை மீட்டெடுத்தல் ஆகியவை நீர் பாதுகாப்பையும் கிராமப்புற வறட்சி எதிர்கொள்ளும் திறனையும் வலுப்படுத்துவதாக குறிப்பிட்டார்.

Leave a Reply