பிரதமர் திரு நரேந்திர மோடி, நேபாளப் பிரதமர் திரு பாலேந்திர ஷாவிடம் தொலைபேசியில் பேசியதோடு, நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குத் தமது இரங்கலைத் தெரிவித்தார். இந்த இக்கட்டான நேரத்தில், நேபாளத்தில் உள்ள தங்களது சகோதர சகோதரிகளுக்கு இந்திய மக்கள் உறுதுணையாக நிற்பதாக திரு நரேந்திர மோடி கூறினார்.
மேலும், நேபாளத்திற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்றும், மீட்பு, நிவாரணப் பணிகளில் இந்தியக் குழுக்கள் நேபாள அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“நேபாள பிரதமர் திரு பாலேந்திர ஷாவிடம் தொலைபேசியில் பேசி, நேபாளத்தில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்தேன். இந்த இக்கட்டான நேரத்தில், இந்திய மக்கள் நேபாளத்தில் உள்ள தங்கள் சகோதர சகோதரிகளுக்குத் துணை நிற்கிறார்கள்.
நேபாளத்திற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. இந்தியக் குழுக்கள் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.”
எம்.பிரபாகரன்
