250 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.

ரூ. 290.08 கோடி செலவிலான 250 புதிய பேருந்துகளின் சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று (ஆகஸ்ட் 25) கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 290 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான 250 புதிய பேருந்துகளின் சேவையைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 697 கோடி ரூபாய் மதிப்பில் 625 தாழ்தள மின்சாரப் பேருந்துகள் ஐந்து பணிமனைகள் மூலம் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து, 1,337 கோடி ரூபாய் மதிப்பிலான 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகள் 7 பணிமனைகள் மூலம் இயக்க போக்குவரத்து கழகம் சார்பில் திட்டமிடப்பட்டது.

Leave a Reply